அத்திப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மைகள்...?

அத்திப்பழத்தில் அதிகம் வைட்டமின் A, B1 மற்றும் B2 நிறைந்துள்ளது. மேலும் இதில் மங்கனீஸ் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதனோடு சேர்த்து, செம்பு, இரும்பு, மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்துள்ளது.

அத்திப்பழத்தில் கால்சியம் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளதால் இது உங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகப் படுத்தும்.
 
அத்திப்பழம் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்த்தியை அதிகப் படுத்தும். இதனால் குறிப்பாக, உங்கள் உடலில் ஏற்படக் கூடிய உடல் எடை அதிகரிப்பு, மாத  விடாய் காலத்தில் ஏற்படும் வலி, மற்றும் புற்றுநோய் ஏற்படுவதற்கான அறிகுறிகளை இது போக்க உதவும்.
 
அத்திப்பழத்தில் பெநோல் என்ற ஆக்ஸிஜனேற்றம் இருப்பதால் அது உங்களுக்கு இருதய நோய் ஏற்படாமலும், பல வகை புற்றுநோய்கள் ஏற்படாமலும் இருக்க உதவுகின்றது. இது ஆக்ஸிஜனேற்றம் நிரந்த ஒரு நல்ல சத்தான உணவு என்று கூறலாம்.
 
அத்திப்பழத்தில் பீட்ட-கரோடின் இருப்பதால் மேலும் இதில் பஞ்சல்டிஹாய்ட் இருப்பதாலும் பிசின் என்னும் ஜீரணிக்கும் என்சைமை உருவாக்குகின்றது. இதனால் ஜீரணம் எளிமையாகின்றது.
 
அத்திப்பழம் பல நன்மைகளை தருகின்றது. இதனை தொடர்ந்து சாப்பிடும் போது, உங்கள் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படுவதை நீங்கள் கவனிக்கலாம். மேலும் இதனை உலர்ந்த பழத்தை சாப்பிடும் போது மேலும் பல நன்மைகள் ஏற்படுகின்றது. 
 
அத்திபழத்தில் அதிகம் நார் சத்து இருப்பதால் இது உங்கள் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவும். இந்த நார் சத்து நம் உணவில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒன்று. நார் சத்து உணவை எளிதாக ஜீரணிக்க செய்யும். மேலும் இதனால் உடலில் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நீரழிவு நோய் மற்றும்  இருதய நோய் போன்ற அறிகுறிகளையும் இது வர விடாமல் செய்யும்.
 
அத்திப்பழத்தில் பொட்டாசியம் இருப்பதால் இது உங்கள் உடலில் இருக்கும் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது. மேலும் சோடியம் ஏற்படுத்தும் தீய விளைவுகளை இது எதிர்த்து நல்ல பலன்களை தருகின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்