ஒரு டம்ளர் தண்ணீரில் ஆவாரம் பூவை போட்டு, தண்ணீர் பகுதியாக வரும் வரை கொதிக்கவைத்து, அதை காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து சரியான அளவில் பராமரிக்கிறது.
உடல் துர்நாற்றம் நீங்க சிறிதளவு ஆவாரம் பூக்களை எடுத்து நன்றாக அரைத்து உடல் முழுவதும் பூசி அரை மணி நேரம் கழித்து குளித்து வரலாம். இவ்வாறு குளித்து வந்தால் உடல் துர்நாற்றம் நீங்குவதோடு, சொறி, அரிப்பு போன்றவற்றையும் நீக்கும்.