சமைக்காத உணவில் உள்ள அற்புத பலன்கள் என்ன...?

சமைத்த உணவில் பழகிப் போன சீரண மண்டலம் திடீரென அனைத்தையும் சமைக்காமல் சாப்பிட துவங்கும் போது பிரச்சனைகள் ஏற்படக்கூடும். பழத் துண்டுகளின் மேல் ஐஸ்கிரீம் போடுவது, சர்க்கரை போடுவது என்ற அதிகப் பிரசங்கித் தனமில்லாமல் பழத்  துண்டுகளை அப்படியே சாப்பிடுவது நல்லது.
பழங்களில் நோய் எதிர்ப்பாற்றல், வயோதிகம் குறைக்கும் மார்க்கண்டேய மகத்துவம், இன்னும், புற்றுநோய் முதலிய பல நாட்பட்ட நோய்களை எதிர்க்கும் தாவர சத்துக்கள் அதிகம் உண்டு. சிவப்பு, நீல, ஆரஞ்சு, மஞ்சள் நிறமுள்ள அனைத்துப் பழங்களிலும் இந்த நிறமிச் சத்துக்களால்  கூடுதல் பலன் உண்டு.
 
எளிதில் கிடைக்கும் கொய்யா பழத்தை சாப்பிட ஆரம்பியுங்கள். அதில் மிளகாய்த்தூள், உப்பு தூவி சாப்பிடுவது தவறு. வெறும் மிளகாய்த்தூள், அல்சரில் இருந்து புற்றுநோய் வரை வரவழைக்கும் வாய்ப்பு உள்ளது.
அதிக நார்த் தன்மையுள்ள கீரை, மாவுச்சத்துள்ள கிழங்குகளை சமைத்துச் சாப்பிடுவது தான் நல்லது. செல்லுலோஸ் அதிகமுள்ள கீரைகள், கார்போஹைட்ரேட் அதிகமுள்ள கிழங்குகள் வேகாதிருப்பின் அஜீரணம் உண்டாகும். வெந்து கெட்டது முருங்கைக் கீரை; வேகாமல் கெட்டது  அகத்திக் கீரை என்ற பழமொழி சொல்வது முருங்கைகீரையை அதிகம் வேக வைக்கக் கூடாது என்பது தான் அது.
 
வெண்டை, வெங்காயம், கேரட், முள்ளங்கி, தக்காளி இவை அப்படியே சாப்பிடுவதில் முதலிடம் பிடிக்கும் காய்கறிகள். சுரைக்காய் சாறு  சாப்பிடும் பழக்கம் யோகா பிரியர்களிடம் அதிகரித்து வருகிறது.
 
லேசாக ஆவியில் வெந்தபின் காய்கறிகளைச் சாப்பிடுவது நல்லது. உடல் உழைப்பு உள்ளவருக்கு சீரணத்திற்கான வெப்பம் சிறப்பாக உடலில் இருக்கும். அவர்கள் சமைக்காமல் சாப்பிட்டாலும் செரிக்கும். பாசிப்பயறு, கொண்டைக்கடலை போன்ற முளைகட்டிய தானியங்கள் அப்படியே  சாப்பிடலாம்.
 
முளைக் கட்டிய தானியங்களில் அதிகப்படியான புரதங்கள் ஒருசில எதிர் ஊட்டசத்தும் இருப்பதாக சில கருத்துக்கள் வருகின்றன. ஆதலால்,  அவற்றுடன் மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடுவது இன்னும் நல்லது. சமைக்காத காய்கறியை மற்றும் பழங்களை உணவுக்கு முன்னர்  சாப்பிடுவதும் ஜீரணத்திற்கு நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்