பீர்க்கங்காயில் உள்ள வைட்டமின்களும் ஏராளமான மருத்துவ குணங்களும் !!

பீர்க்கங்காயில் நார்ச்சத்து, வைட்டமின்கள் ஏ, பி, சி, துத்தநாகம், இரும்பு, ரிபோஃப்ளோ வின், மெக்னீசியம், தயாமின் மற்றும் தாது உப்புக்கள் உள்ளது.

பீர்க்கங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் வயிற்றில் அமில சுரப்பு அதிகமாவதை தடுக்கும். மேலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். பீர்க்கங்காயில்  நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலுக்கும் மூல நோய்க்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
 
பீர்க்கங்காயை துண்டுகளாக்கி இரண்டு டம்ளர் நீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து அதனோடு தேவைக்கு ஏற்ப உப்பிட்டு அன்றாடம் காலை மாலை என இரண்டு வேளை பருகி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளித்தள்ளப்பட்டு வயிறு சுத்தமாகும். உடல் ஆரோக்கியம் பெறும்.
 
பீர்க்கங்காய் சாறு எடுத்து அரை டம்ளர் சாறுடன் போதிய சர்க்கரை சேர்த்து தினம் இரு வேளை குடித்து வருதலால் ஆஸ்துமா எனும் மூச்சு முட்டுதல் குணமாகும். 
 
பீர்க்கங்காயின் இலைகளை மைய அரைத்து அதனோடு பூண்டை நசுக்கிச் சாறு எடுத்து சேர்த்து தொழு நோயின் மேலே பூசி வந்தால், தொழு நோய்ப் புண்கள்  விரைவில் ஆறும்.
 
பீர்க்கங்காய் இலைகளை அரைத்து, சொறி, சிரங்கு நாள்பட்ட புண்களில் பற்று போட்டால் அவை சீக்கிரமே குணமாகும். இதே போல், பீர்க்கங்காயின் சதைப்  பகுதியை நன்றாக நசுக்கி காயங்களின் மேல் வைத்தால், காயம் சீக்கிரம் ஆறும். பீர்க்கை நார் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, ஆரோக்கியமாக வைக்க  கூடியது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்