பலவித நோய்களை குணமாக்கும் அற்புத மூலிகை துளசி !!

வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (10:38 IST)
துளசி வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும். ஈரலில் உள்ள ஜீரண நீர்களை தூண்டி நஞ்சுகளை வெளியேற்றும். கெட்ட கொழுப்பை நீக்கும் மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும்.


தேள் கொட்டிவிட்டால் கடுகடுப்புடன் வலி இருக்கும். தேள் கொட்டிய இடத்தில் துளசி இலைகளை வைத்து தேய்த்து விட்டால் உடனே விஷம் இறங்கி விடும். தேள் கடிக்கு இது தான் முதல்உதவி. ஒன்பது கருந்துளசி இலையை மென்று தின்று ஒரு மூடி முற்றின தேங்காயை உடைத்து சாப்பிட்டால் தேள் விஷம் முறியும்.

துளசி ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை அதிகரித்து உடலின் செல்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்து நரம்புகளை வலுவாக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். ஹார்மோன்களை சீராக்கும். தூக்கமின்மையை போக்கும்.

துளசி இலைகளை தண்ணீரில் ஊறப்போட்டு சில மணிநேரம் கழித்து அந்த தண்ணீரை குடித்து வந்தால் நாட்பட்ட வாயு, வயிற்று உப்பிசம் நீங்கும்.

துளசி இலைச்சாறு ஒரு சக்தி மிகுந்த கிருமி நாசினியாகவும், ரத்தத்தை சுத்திகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. காற்றை சுத்தப்படுத்தி, சுவாசத்தை சீராக்கி சளித்தொல்லையை போக்கும்.

துளசி இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டுக்கு எதிராக செயல்பட்டு ஆண்மை குறைவை ஏற்படுத்தும் என்ற தவறான கருத்து மக்களிடம் உள்ளது. துளசி உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி தேவையற்ற வெப்பத்தை குறைக்குமே தவிர பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்