திணையில் கால்சியம். புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம் போன்றவை உண்டு. திணைக்கு உள்ள சிறப்பு மற்ற தானியங்களை காட்டிலும் இதில் கால்சியம் அதிகமாக உள்ளது.
அரிசி, கோதுமை, கேவரகை காட்டிலும் இதில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. திணை அரிசியில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற மேலும் பல்வேறு சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.
திணை நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவாகும். இதை தினமும் ஒரு வேளை உணவாக சாப்பிட்டு வரும் போது மலச்சிக்கல் நீங்கும். வயிறு, குடல், கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தும். அவற்றில் இருக்கும் புண்களை ஆற்றும். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாகும்.