வறுத்த பூண்டுகளை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா....!!

தினமும் பூண்டினை உணவில் சேர்த்துக் கொண்டால் எண்ணற்ற நோய்கள் நம்மை அணுகாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.


தினமும் 2 பூண்டினை பச்சையாக சாப்பிடுவது உடலுக்கு நிறைய நன்மைகளை தரும். ஆனால் நிறைய பேருக்கு பூண்டினை பச்சையாக சாப்பிடுவது பிடிக்காது. 
 
பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள் கட்டுப்படுத்தப்படும். இத்தகைய பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள்  அற்புதங்கள் ஏற்படும்.
 
பூண்டைச் சாப்பிடுவதன்மூலம் ஒருவருடைய ரத்த அழுத்தப் பிரச்னைகள், கொலஸ்ட்ரால் கோளாறுகள் போன்றவை சரியாகும், இரத்த நாளங்கள் லகுவாகும், இதன்மூலம் இதயம் சார்ந்த பிரச்னைகளை போக்கமுடியும்.
 
அதேபோல், பூண்டுகள் நம் உடலில் கெட்ட கொழுப்பு அதிகம் சேராமல் பார்த்துக்கொள்கின்றன. ஆறு பூண்டுகளை வறுத்துச் சாப்பிடுங்கள். சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில், பூண்டு செரிமானமாகிவிடும்.
 
அடுத்த ஒரு மணி நேரத்தில் தொடங்கி, பூண்டு உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்து உடல்நலத்தைக் காக்கும், புற்றுநோய் செல்களை அழிக்கும். அடுத்த இரண்டு மணி நேரத்தில், உடலின் வளர்சிதைமாற்றம் தூண்டப்படும், தேவையில்லாத நீர், கொழுப்பு குறையும்.
 
ஆறு முதல் ஏழு மணி நேரம் தாண்டியவுடன், பூண்டு இரத்த நாளங்களில் நுழையும், பேக்டீரியாக்களை எதிர்த்து உடாலுக்கு ஆரோக்கியம் தரும். அடுத்த ஒரு மணி நேரத்தில், பூண்டின் சத்துகளை உடல் உறிஞ்சிக்கொள்ளும், இது சிறந்த பாதுகாப்பாகச் செயல்படும்.
 
இதயம் சார்ந்த பல பிரச்னைகளைப் பூண்டு குணப்படுத்தி உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்புச்சக்தியைத் தரும், எலும்புகளை வலுவாக்கி, சோர்வைப் போக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்