செண்பகப் பூவை கஷாயம் தரும் ஆரோக்கிய பலன்கள்!!

செண்பகப் பூ மிகச்சிறந்த மருந்தாகும் செண்பகப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து தினமும் காலையில்  சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.
செண்பகப் பூவை கஷாயம் செய்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் நரம்புத் தளர்வு நீங்கும். செண்பகப் பூவை கஷாயம்  செய்து அருந்தி வந்தால் பித்த நீர் சுரப்பு குறையும்.
 
ஆண்மை குறைவு நீங்க செண்பகப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால்  ஆண்மைக் குறைவு நீங்கும்.
 
செண்பகப் பூ வலி நிவாரணியாகவும் செயல்படக்கூடியது. செண்பகப் பூக்களை அரைத்து பசையாக எடுத்துக்கொண்டு அதனுடன்  நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி சூடு ஆறியதும் வடிகட்டி வைத்துக்கொள்ளவும். இதை வலி, வீக்கம், கை கால் எரிச்சல், உடல் எரிச்சல்,  முழங்கால் வலி, மூட்டு வலி மற்றும் தலைவலிக்குப் பூசி வந்தால் பலன் கிடைக்கும்.
 
காய்ச்சல் குணமாக வைரஸ் பாக்டீரியாக்கள் ஏற்படுத்தும் காய்ச்சலை குணப்படுத்த செண்பகப் பூவை காயவைத்து கஷாயம் செய்து அருந்தி  வந்தால் காய்ச்சல் குணமாகும்.
 
கண் பார்வை ஒளிபெற செண்பகப் பூவை கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து அருந்தி வந்தால் கண் பார்வை தெளிவுபெறும். 
 
சிறுநீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் போன்ற நோய்களுக்கு செண்பகப் பூவை கஷாயம் செய்து காலையும் மாலையும் அருந்தி வந்தால் சிறுநீர் பெருகும் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் குணமாகும்.
 
பாலியல் நோய் தாக்கம் உள்ளவர்கள் செண்பகப் பூவை காயவைத்து பொடி செய்து தினமும் இருவேளை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் பாலியல் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்கம் குறையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்