ஏராளமான மருத்துவ பலன்களை அள்ளித்தரும் முருங்கை இலை !!

புதன், 12 ஜனவரி 2022 (10:50 IST)
முருங்கை மரத்தின் தலை முதல் அடி வரை அனைத்தும் உடலுக்கு நன்மை பயக்கும். இதன் இலைகளை ரசம், பொரியல், சூப் என பல உணவுகளை தயாரிக்கவும் பயன்படுத்தலாம்.


முருங்கை இலைகளில் உள்ள வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தை விட அதிகமாக உள்ளது.  முருங்கை இலைகளில் வைட்டமின் சி, இரும்பு, மெக்னீசியம், அத்தியாவசிய அமினோ அமிலங்கள், புரதங்கள் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

முருங்கை பொடியை வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து காலையில் குடிப்பதால் குடல் இயக்கம் மேம்படும்.

முருங்கை இலையில் பொட்டாசியம், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. நீரிழிவு அல்லது உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் முருங்கை இலைகளை தங்கள் உணவில் தவறாமல் சேர்ப்பது சிறந்தது.

முருங்கை இலையை காய வைத்து, பொடியாக்கி, காலை வேளையில், தேநீரில் கலந்து முருங்கை இலை டீ-யாக குடித்து வரலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு டீ அல்லது காபியுடன் முருங்கை இலைப் பொடியை கலந்து உட்கொள்வதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.

முருங்கை இலைப் பொடியானது, தோல் நோய்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முருங்கை இலையில், பூஞ்சை காளான், வைரஸ் தடுப்பு, ஆண்டிடிரஸன் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் செறிந்து காணப்படுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்