கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் இத்தனை அற்புத பலன்கள் உள்ளதா...?

திங்கள், 23 மே 2022 (10:49 IST)
கருப்பு கவுனி அரிசியில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் உள்ளன. இதனால் நீரிழிவு, புற்றுநோய், இதய நோய் மற்றும் இன்னும் பல நோய்கள் வராமல் தடுப்பதற்கு உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.


கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து வளமான அளவில் இருப்பதால், உணவு சாப்பிட்ட பின் இரத்தச் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல், சீராக வைப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கல், செரிமானப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கிறது.

அரிசியில் உள்ள நார்ச்சத்தின் அளவை விட கருப்பு கவுனி அரிசியில் இரண்டு மடங்கு நார்ச்சத்து அதிகம் உள்ளது.

கருப்பு கவுனி அரிசியை தினமும் சாப்பிட்டால் தமனியில் கொழுப்பு படிதலை குறைத்து மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைகிறது.

கருப்பு கவுனி அரிசியில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து ‘LDL’ என்ற கெட்ட கொலஸ்ட்ரால் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.

கருப்பு கவுனி அரிசியில் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்துள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுவதோடு, உடலுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது.

கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து வளமான அளவில் உள்ளது. கருப்பு கவுனி அரிசி சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைகிறது.

நீரிழிவு நோய் இருப்பவர்கள் வெள்ளை அரிசியை சாப்பிடுவதற்கு மாற்றாக, கருப்பு கவுனி அரிசியை தினமும் உணவில் எடுத்துக் கொண்டால், நீரிழிவை நோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்