உடலில் தீக்காயங்கள் ஏற்ப்பட்டால் தேங்காய் எண்ணெய் தீப்புண் மீது தடவி வந்தால் தீப்புண் ஆறும். செம்பருத்தி இலை, பூ ஆகியவற்றை சேர்த்து அரைத்து தீப்பட்ட புண்ணின் மீது பூசி வந்தால் தீப்பட்ட புண்ணில் ஏற்படும் எரிச்சல், காந்தல் குறையும்.
வேப்பங்கொழுந்து, ஆமணக்கு இலை இரண்டையும் அரைத்து தீப்புண்ணில் வைத்து தினமும் கட்டி வர தீப்புண் ஆறும். 30 மில்லி தேங்காய் எண்ணெயுடன், 50 மில்லி தெளிந்த சுண்ணாம்பு நீரைக் கலந்து தீப்புண்ணின் மீது தடவி வந்தால் தீப்புண் குறையும்.