தினமும் சோம்பு சேர்த்த உணவுகளை சாப்பிடுவதால் உண்டாகும் பயனகள் !!

புதன், 2 மார்ச் 2022 (15:39 IST)
சோம்பு சேர்த்து சமைக்கும் உணவுகள் ஒரு வித நறுமணத்துடன் இருக்கும். இது பெருஞ்சீரகம் என்றும் அழைக்கபடுகிறது.


சிலருக்கு வேலைப்பளு, மனஅழுத்தம் மற்றும் உடல் நல பிரச்சனைகள் காரணமாக சரியாக தூக்கம் வராது. இந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கு தினமும் சோம்பு சேர்த்த உணவுகளை உணவில் சேர்த்து வந்தால் அதில் உள்ள மெக்னீசியம் சத்து நரம்புகளுக்கு வலிமையளித்து ஆழ்ந்த தூக்கத்தை பெற உதவுகிறது.

மலட்டுத்தன்மை பிரச்சனை உள்ள ஆண் பெண் இருவரும் மற்ற மருந்துகளை சாப்பிடும் போது, சிறிதளவு சோம்பையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவிலேயே மலட்டுத்தன்மை நீங்கும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் சோம்பை கொதிக்க வைத்து குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரியான அளவில் பராமரிக்கும். உடல் அஜீரணத்தால் வாயுப் பிரச்சனை ஏற்படுகிறது. சோம்பை சிறிது சாப்பிட்டால் வயிற்றுக்குச் செல்லக்கூடிய இரத்த ஓட்டத்தை சரி செய்து ஜீரண சக்தியை அதிகரிக்கும். இதனால் வாயு பிரச்சனை குணமாகும்.

சோம்பு டீயை தினமும் குடித்து வந்தால் உடலின் ஈரப்பதத்தைத் தக்க வைத்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். டீ, காஃபிக்கு சோம்பு டீ நல்ல மாற்றாக இருக்கும். இதை அருந்துவதால் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.

குளிர்காலங்கள் மற்றும் மழைக்காலங்களில் ஜலதோஷம் வந்தால் சரியாக சுவாசிக்க கூட முடியாது, அந்த சமயங்களில் மிகவும் சிரமப்படுவோம். அந்த சமயங்களில் இந்த சோம்பை சிறிது எடுத்துக்கொண்டு வெறும் வாயில் நன்றாக மென்று சாப்பிட்டு, ஒரு டம்ளர் வெந்நீர் பருகி வந்தால், இந்த ஜலதோஷம் பிரச்சனை உடனே சரியாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்