உடலில் நீர்ச்சத்து அதிக அளவில் குறைவதை தடுக்கும் இளநீர் !!

வியாழன், 27 ஜனவரி 2022 (18:52 IST)
இளநீரில் உடலுக்கு தேவையான பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான ரிபோஃப்ளேவின், நியாசின், தையமின், பைரிடாக்சைன் மற்றும் ஃபோலேட் ஆகியவை இயற்கையிலேயே கிடைக்கிறது.


வயிற்றுக் போக்கு பிரச்சனை இருக்கும்போது உடலில் நீர்ச்சத்து அதிக அளவில் குறைவதால் இழந்த நீர்சத்தை திரும்ப பெற இளநீர் அருந்துவது மிகவும் நல்லது.

இளநீரில் குறைந்த அளவே கொழுப்பு இருப்பதால் மற்றும் இளநீரை பருகும்போது வயிறும் நிறைந்து போவதால், தேவையற்ற உணவுகளை சாப்பிட முடியாமல் உடல் எடை குறைய உதவுகிறது.

இளநீரில் சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதாலும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுவதாலும், நீரிழவு நோய் உள்ளவர்கள் இளநீர் பருகுவது மிகவும் நல்லது.

விஷ காய்ச்சல் மற்றும் ஹேர்ப்ஸ், இவை இரண்டுமே சில வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. இளநீரில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி அடங்கியிருப்பதால் வைரஸ் கிருமிகள் தாக்குதலில் இருந்து நம் உடலை பாதுகாக்கிறது.

இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் ல்ல மருந்தாக அமைகிறது.

பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் இளநீரில் அதிகம் இருப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கும்.

முகத்தில் ஏற்படும் பருக்கள்,  புள்ளிகள், சுருக்கங்கள் மற்றும் படை போன்ற இடங்களில் இளநீரை இரவில் படுக்கும் போது தடவிவிட்டு காலையில் கழுவ வேண்டும். இதனை தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் செய்தால் சரும பிரச்சனைகள் சரியாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்