சாதாரண உப்பில் இருப்பதை போலவே இந்துப்பில் சோடியம் குளோரைடு, அயோடின் சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், குரோமியம், இரும்பு, துத்தநாகம், போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.
இந்துப்பு கொண்டு உணவு சமைத்து சாப்பிட்டுவர, இரத்தத்தில் உள்ள குறைபட்ட தாதுக்கள் எல்லாம் இயல்பான அளவில் சரியாகி, சிறுநீரக இயக்கங்கள் சீராகி, உடல் நலம் பெறுவர். மேலும், உடல் வேதனையும் நீங்கிவிடும்.
தொண்டை வலி மற்றும் சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கிறது. மூக்கு, காது, ஆஸ்துமா பிரச்சினைகளை கட்டுப்படுத்துகிறது. மற்ற உப்புகளை விட இந்துப்பு நம் கண்களுக்கு மிகவும் நல்லது. நம் இதயத்திற்கும் நல்லது. நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தாது.