சில வகையான பழங்களும் அதன் அற்புத மருத்துவ பயன்கள் !!
வெள்ளி, 15 ஜூலை 2022 (11:02 IST)
சாத்துக்குடியில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருட்களும் உள்ளன. வைட்டமின் சி குறைவினால் ஸ்கர்வி நோய், ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படும்.
கொய்யாப்பழத்தில் வைட்டமின்கள் சி, பி உள்ளது. மலச்சிக்கலைப் போக்கும், மூல நோயாளிகளுக்கு நல்லது, ரத்த ஓட்டம் சீர்பட உதவும், பற்களுக்கு நல்ல உறுதி தரும்.
தர்பூசணி: தர்பூசணியில் இரும்புச்சத்து 7.9 கிராம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் பி, சி சிறிதளவு உள்ளன.
ஆப்பிள் பழத்தில் வைட்டமின் ஏ, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருட்கள் சிறிதளவு உள்ளன. தசை வளர்ச்சிக்கும், பற்களின் உறுதித் தன்மைக்கும் இப்பழம் உதவும்.
வாழைப்பழங்களில் பூவன் பழம் மலச்சிக்கலைப் போக்கவல்லது, நேந்திரன் பழம் ரத்தசோகையைப் போக்கும், மலைவாழைப்பழம் ரத்த விருத்தி செய்யும்.
சப்போட்டாவில் வைட்டமின் ஏ, பி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருட்கள் சிறிதளவு உள்ளன. இதை சாப்பிட்ட உடனேயே உடலுக்கு ஆற்றலைத் தரும். இப்பழத்தை சாப்பிடுவதால் ரத்தசோகையைப் போக்கலாம்.
கருப்பு திராட்சையில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருட்களும் உள்ளன. இப்பழத்தில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் நீங்கும்.