பெப்பெர்மிண்ட் எண்ணெயின் மணம் மூளையின் தசைகளைத் தளர்த்த உதவுகிறது. மூன்று துளி பெப்பெர்மிண்ட் எண்ணெயை ஒரு டேபிள்ஸ்பூன் ஆல்மண்ட் எண்ணெயோடு கலந்து தலையிலும், பின்னங்கழுத்திலும் தடவி தலைவலியில் இருந்து விடைபெறலாம்.
இலவங்கப் பட்டையைப் பொடி செய்து நீர் கலந்து நெற்றியில் தடவினால் தலைவலி குறையும். கிராம்புப் பொடியை முகர்ந்தால் சுறுங்கி இருக்கும் இரத்த நாளங்கள் விரிவடைந்து தலைவலி சரியாகும். இரு துளி கிராம்பு எண்ணெயை ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் கலந்து கடல் உப்பு சேர்த்து நெற்றியில் மிதமாக மசாஜ் செய்தால் தலைவலி சரியாகும்.
மக்னீசியம் குறைபாடு தலைவலியோடும், ஒற்றைத் தலைவலியோடும் நேரடித் தொடர்புள்ளது. பாதாம், எள், ஓட்ஸ், முந்திரி, முட்டை, பால், சூரியகாந்தி விதைகள், பிரேசில் நட்ஸ், பீனட் பட்டர் போன்றவை அதிக மக்னீசியம் கொண்டவை, எனவே இவற்றை உட்கொண்டால் தலைவலிக்கு உடனடியாக பலனளிக்கும்.
தேன் வீக்கத்தைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டது, அதில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. தலைவலியால் அடிக்கடி அவதிப்படுவோர் தினமும் காலையில் ஒரு டேபிள்ஸ்பூன் தேனை மிதமான சூட்டில் உள்ள நீருடனும், 2 டேபிள்ஸ்பூன் தேனை உணவு உண்பதற்கு முன்பும் அருந்த வேண்டும்.