சருமம் மற்றும் முடியை பராமரிக்க உதவும் ஆலிவ் ஆயில்....!

ஆலிவ் எண்ணெய் என்பது உங்கள் சமையல் அறையில் மட்டும் பயன்படும் பொருள் அல்ல. இதை உங்கள் சருமம் மற்றும் கூந்தல்  பிரச்சினைகளை சரிசெய்யவும் பயன்படுத்தலாம்.
கடும் கோடையில் வெய்யலினால் சருமம் வறண்டு, கறுத்துக் காணப்படும். ஆலிவ் ஆயில் உங்கள் சருமத்தை எல்லாவிதத்திலும் பாதுகாக்கும். ஆலிவ் ஆயிலைத் தேய்த்துக் குளிப்பதால் சருமம் வழவழப்பாகவும், மேல் தோல் பளபளப்பாகவும் எண்ணைப் பசையுடனும் பொலிவாக காட்சி  அளிக்கும். 
 
சன்ஸ்கிரீன்: இதை டீ டிக்காஷனோடு சம அளவில் கலந்து, உடல் மற்றும் முகம் முழுவதும் பூசவும். 1 மணி நேரம் கழித்து நீரால் அலசவும், சருமத்தில் இந்தக் கலவை சன்ஸ்கிரீனாக செயல்படும். 
 
வலி நிவாரணி: ஆறு துளி லேவண்டர் எசன்ஷியல் ஆயிலு டன், 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயைக் கலக்கி. வலி உள்ள பகுதியில் மசாஜ்  செய்யவும்.
 
நம் உடம்பில் தினம் தினம் புது செல்கள் உருவாகி பழைய செல்கள் உதிருகின்றன. சிறிது சர்க்கரையும் ஆலிவ் ஆயிலும் கலந்து முகத்தில் தேய்த்தால் மிகுதியான இறந்த செல்கள் உதிர்ந்து முகம் பளபளப்பாகும். உடலின் மற்ற பகுதியில் ஆலிவ் ஆயிலும் கடல் உப்பும் கலந்து  தேய்க்கலாம்.
 
வறண்ட சருமம் மற்றும் கூந்தலுக்கு: முட்டையின் மஞ்சள் கருவுடன் கொஞ்சம் ஆலிவ் ஆயிலை கலக்கி, முகத்தில் பூசவும். 20 நிமிடங்கள்  கழித்து, நீரில் கழுவவும். மஞ்சள் கரு, ஆலிவ் ஆயில் கலவை, வறண்ட கூந்தலையும் சரி செய்ய உதவும். 
 
உடையும் நகத்துக்கு: 1 கப் ஆலிவ் ஆயிலுடன், ஒரு துளி எலுமிச்சை, யூகலிப்டஸ் எசன் ஷியல் ஆயிலை சேர்த்து, அதில் நகங் களை 20  நிமிடங்கள் ஊற வைக்கவும்.
 
கூந்தலுக்கு ஆலிவ் ஆயிலை உபயோகிப்பதால் கூந்தல் வலுவானதாகவும், அடர்த்தியாவதுடன் கூந்தல் செழுமையாகவும் காட்சி தரும். ஆலிவ் ஆயில் உங்கள் கூந்தலுக்கு டீப் கண்டிஷனராகவும், பொடுகுத் தொல்லை தீரவும் உதவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்