இத்தனை ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடியதா செம்பருத்தி...!!

திங்கள், 25 ஜூலை 2022 (14:06 IST)
செம்பருத்தி பூவை தங்க பஸ்பம் என்று சித்தர்கள் குறிப்பிடுகிறார்கள். ஏனென்றால் அதிகளவு மருத்துவ பயன்கள் கொண்டது.


செம்பருத்தி செடியில் இலைகள், பூக்கள், வேர் பகுதி அனைத்தும் மருந்தாகப் பயன்படுகிறது. இதயநோய்க்கு நல்ல அருமருந்தாக அமைகிறது. இதய படபடப்பு, வலி, ரத்த குழாய் அடைப்பு போன்றவற்றையும் குணமாக்கவல்வது.

இதய நோய் உள்ளவர்கள், காலை வெறும் வயிற்றில் பூக்களை எடுத்து கொண்டால் இதய நோய் குணமடையும். ஜூஸாகவோ, டீயாகவோ கூட அருந்தலாம். மாதவிடாய் கோளாறுகள், கருப்பை கோளாறுகள், ஒழுங்கற்ற மாதவிடாய், வெள்ளைபடுதல் இதற்கு அருமருந்தாய் திகழ்கிறது.

வயது வந்தும் பருவம் அடையாதவர்களுக்கு, நெய்யில் பூக்களை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்கள், கர்பப்பை பிரச்சனைகளுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது.

இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படுகின்ற நோய்களுக்கும் மருந்தாகிறது. வயிற்றுபுண் வாய் புண்களுக்கும் தீர்வாக அமைகிறது. ஒருமாத காலத்திற்கு தினமும் பூக்களின் பத்து இதழ்களை தின்று வந்தால் வாய் புண்கள் குணமடையும்.

அஜிரணக்கோளாறுகளை நீக்குகிறது. LDL கொழுப்பின் அளவினை குறைப்பதில் சக்தி வாய்ந்தது. தமனிகளின் அடைப்புகளை நீக்குவதன் மூலம், கொழுப்பின் அளவை குறைக்கின்றது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதனை பயன்படுத்தலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்