பாகற்காய் பல்வேறு மருத்துவ குணங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது. அதன் கசப்பு தன்மை நம்மை சாப்பிட விடாமல் தடுக்கிறது. பலருக்கும் பெரியவர்களே சாப்பிட பிடிக்காத காய் என்றால் அது பாகற்காய் தான். அதை எப்படி சமைத்தாலும் அதன் சுவை காசப்பாகவே தோன்றும். ஆனால் அதனை டீயாக செய்து சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் குறித்து பார்ப்போம்.
கல்லீரலை சுத்தப்படத்தவும், இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுபடுத்தவும், இரத்தம் விருத்தியாகவும், கெட்ட கொழுப்பை கரைக்கவும், உடல் எடையை குறைக்கவும் பாகற்க்காய் பெரிதும் பயன்படுகிறது.
பாகற்காயில் குழம்பு, கூட்டு, பொரியல், வறுவல், சிப்ஸ், பக்கோடா போன்று பலவகையாக செய்து சாப்பிடலாம். அனால் பாகற்காய் வைத்து ஒரு சுவையான ஆரோக்கியமான டீ தயாரிக்க முடியும் என்று நம்மில் பல பேருக்கு தெரியாது. இதை தொடர்ந்து சாப்பிடுவதால் நம் உடலில் பல்வேறு நல்ல மாற்றங்கள் உடலில் நிகழும்.
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் நீங்கி விடும். சர்க்கரையின் அளவு சீராகும். இந்த டீ எந்த ஒரு பக்க விளைவும் இல்லாத ஒரு இயற்கை பானமாகும். அதிக நேரம் எடுக்காமல் உடனடியாக தயாரிக்கக் கூடிய ஒரு டீயாகும். கசப்புத் தன்மையை பற்றி நினைக்காமல் தொடர்ந்து இதனை குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் தாக்கத்தில் இருந்து தப்பித்து விடலாம்.