உலகம் முழுவதும் சுற்றுசூழல் மாசுபாடு பெரும் அச்சுறுத்தலாக மாறி வரும் நிலையில் சுற்றுசூழலையும், இயற்கையையும் பாதுகாக்கும் வண்ணம் செயல்படும் நபர்களில் சிறந்த செயல்பாடுகளுக்காக ஒருவரை தேர்வு செய்து ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஐ.நாவின் சுற்றுசூழல் பாதுகாப்பு விருது இந்திய தொழிலதிபர் ஒருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. டகாசார் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் வித்யுத் மோகன் தனது நிறுவனத்தின் மூலம் விவசாய கழிவுகளை விவசாயிகளிடம் இருந்து வாங்கி அவற்றை கரி தயாரித்து விவசாயிகளின் வருமானத்திற்கு புதிய வழிவகை செய்துள்ளார். அவரது புதிய முன்னெடுப்புக்கு ஊக்கம் தரும் விதமாக இந்த விருது வழங்கப்பட உள்ளது.