‘இந்துப்பு’ என்று கூறப்படும் பாறை உப்பானது கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சல்பர் மற்றும் புளோரைடு, அயோடின் போன்ற தாதுக்களுடன் சோடியம் குளோரைடு அதிக அளவில் உள்ளது. இது மங்கலான பழுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.
இமயமலைப் பகுதிகளின் அருகில் இருந்து எடுத்திருந்ததால், இமாலய உப்பு என்றும், இந்திய உப்பு என்றும் அழைக்கப்பட்டு, பின்னர் அது மருவி இந்துப்பு என்றானது. தற்போது ‘ராக் சால்ட்’ என்றும் அழைக்கப்படுகிறது.
சாதாரண உப்பில் இருப்பதைப் போலவே இந்துப்பிலும் சோடியமும் குளோரைடும் இருப்பதுடன் இயற்கையாகவே அயோடின் சத்து, லித்தியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீஸ், இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட நுண் சத்துகளும் உள்ளன.
இந்துப்பு கலந்த இளஞ்சூடான வெந்நீரைக் கொண்டு வாய் கொப்புளித்துவர, வாய் துர்நாற்றம் நீங்கும், பல் வலிகள், ஈறு வீக்கம் போன்ற வாய் சம்பந்தமான வியாதிகள் தீரும்.
குளிக்கும் நீரில் உப்பை போட்டு குளிக்க உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தை உருவாக்குகிறது. இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. குளிர்ச்சியூட்டும் தன்மை உள்ள இந்த உப்பு, பசியைத்தூண்டும், மலத்தை இளக்கும்.