சருமத்தை மென்மையாக்கி, ஈரப்பதமாக வைக்க உதவும் ஆலிவ் ஆயில்...!!

ஆலிவ் எண்ணெய் நம் தலை முடி, முகம் உள்ளிட்ட உடலின் அனைத்து பாகங்களையும் அழகாகப் பராமரிக்க பெரிதும் பயன்படுகிறது. குளிப்பதற்கு முன் முகத்தில் ஆலிவ் ஆயிலுடன் சிறிது வினிகரை கலந்து தடவி ஊற வைத்து பின் வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்தால் சூரியக் கதிரினால் சருமம் பாதிப்படைவதைத் தடுக்கலாம். 
சூரிய ஒளி, மாசு, வறட்சி போன்ற காரணங்களால் ஏற்படும் சரும பாதிப்புகளைத் தடுக்க மாய்ஸ்சரைஸர் முக்கியம். அதற்கு இயற்கை முறையில் ஆலிவ் எண்ணெய் உதவுகிறது. இது சருமத்தை மென்மையாக்கி, சருமத்தை பருக்கள் இல்லாமல் காக்க உதவுகிறது.
 
ஆலிவ் ஆயிலை பயன்படுத்தி பாடி வாஷ் செய்ய தேவையான பொருட்கள்: தேன் - 4 ஸ்பூன், நாட்டுச் சர்க்கரை - 2 ஸ்பூன், ஆலிவ் ஆயில் -  5 ஸ்பூன். 
 
செய்முறை: முதலில் நாட்டுச் சர்க்கரை மற்றும் தேன் கலந்து அதனுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். இந்த கலவையை ஒரு குப்பியில் எடுத்து சேமித்து வைத்து கொள்ளுங்கள். இதில் சிறிதளவு கலவையை கைகளில் எடுத்து 5 முதல் 10 நிமிடங்கள்  உங்கள் சருமத்தில் நன்றாக மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். 
 
இதனை வாரத்தில் ஒன்று முதல் இரண்டு முறை பயன்படுத்தலாம். சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளி மற்றும் கருத்திட்டுகள் அனைத்தும்  மறைந்துவிடும்.
 
தேனில் உள்ள உங்கள் சருமத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும், மிருதுவாகவும் வைக்க உதவுகிறது. நாட்டுச் சர்க்கரை இறந்த சரும செல்களை அகற்றி முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்தைக் குறைக்க உதவும். ஆலிவ் எண்ணெயில் ஆக்ஸிஜனேற்ற  மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் ஆரோக்கியமான மற்றும் மென்மையான சருமத்தைத் தரும்.
 
தேங்காய் நீரில் வைட்டமின் சி நிறைந்து இருப்பதால் சருமத்தை புத்துணர்ச்சியுறச் செய்து, மென்மையான மற்றும் மிருதுவான சருமமாக  மாற்றுகிறது. 3 தேக்கரண்டியளவு தேங்காய் நீர், 2 தேக்கரண்டியளவு ஆலிவ் எண்ணெய் இரண்டையும் ஒன்றாகக் கலந்து சருமத்தில் அப்ளை  செய்து கழுவுங்கள். இதனை வாரத்தில் இரண்டு முறை செய்யலாம். இது உங்கள் சருமத்தை மென்மையாக்கி, ஈரப்பதமாக வைக்க உதவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்