உடலுக்கு ஆரோக்கியம் தரும் காய்கறிகளும் அதன் சத்துக்களும்...!!

தற்போது மக்கள் இயற்கை உணவுகள் சமைக்காது காய்களை உண்ணும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. பச்சை காய்கறிகளை உணவுடன் சேர்த்து கொள்கிறார்கள். இயற்கை மருத்துவர்களும் சமைக்காத உணவுகளை பச்சையாய் உண்ண வலியுறுத்துகிறார்கள்.
இதன்மூலம் உணவில் உள்ள வைட்டமின் மற்றும் சத்துக்கள் நேரடியாக உடலுக்கு கிடைக்கிறது. மருத்துவர்களும் அதிகமாக காய்கறிகளும் கீரைகளும் சாப்பிடும்படி அறிவுறுத்துகிறார்கள்.
 
வெண்டைக்காயில் வைட்டமின்கள் ஏ, பி, சி, ஈ மற்றும் கே யும், கனிமங்கள், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம் அதிகமாக உள்ளது. வயிற்றுபொருமல், தசைபிடிப்பு, மலச்சிக்கல், வாயுதொல்லை, கொலஸ்ட்ரால் ஆகியவற்றை நீக்கும் சக்தி  வெண்டைக்காய்க்கு உண்டு.
 
இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு உடலில் துவர்ப்பு சக்தி குறைவது தான் காரணம். இதய பிரச்சனை இதயம் சுருங்கி விரிய துவர்ப்பு  சுவையை உடலில் கூட்ட வேண்டும் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள். துவர்ப்பு சுவைக்கு வாழைமரம் சிறந்த உணவாகும். 
 
வாழைக்காயில் கொழுப்பு 0.3 கிராம், சோடியம் 1 கிராம், கார்போஹைட்ரேட் 23 கிராம், நார்ச்சத்து 2.6 கிராம், சர்க்கரை 12 கிராம், புரதம் 1.1  கிராம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே உள்ளது. கனிமங்களில் பொட்டாசியம் அதிக அளவு  உள்ளதால் செரிமானத்திற்கு உதவுகிறது.
 
பூசனிக்காயை சமைத்து சாப்பிடும்போது நரம்பு சம்பந்தமான நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண், மேகவேட்டை குறையும். உடலில்  சூட்டை தணித்து, சிறுநீரக நோய்களை குணப்படுத்துகிறது. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரழிவு, வாந்தி,  தலைச்சுற்றல் ஆகியவற்றையும் நீக்க பயன்படுகிறது.
 
உடலில் உள்ள நீரை வெளியேற்றுவதற்கு இரண்டு கத்தரிக்காய் மற்றும் இரண்டு தக்காளியை எடுத்து அரைமணி நேரம் வெந்நீரில்  ஊறவைத்து அதனை மிக்ஸியில் அடித்து வடித்து குடித்துவர சிறுநீர் பிரியும்.
 
கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை கருவில் நல்ல ஆரோக்கியத்துடன் வளர கொத்தவரங்காய் நல்ல உணவாகும். வலுவிழந்த எலும்புகளுக்கு  நல்ல வலுவூட்டவும், பல் கூச்சம், பற்களில் வலி, பற்சிதைவு போன்ற கோளாறுகளுக்கு நல்ல தீர்வு தருகிறது. இதனை சாப்பிட்டுவர  புற்றுநோய் உருவாகும் செல்கள் நம் உடலில் வளராது தடுக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்