சோம்பை சிலர் பெருஞ்சீரகம் என்று அழைப்பர். இந்த சோம்பு உணவின் சுவையையும், மனத்தையும் அதிகரிக்கும் பணியுடன் சேர்த்து உடல் ஆரோக்கியம் மற்றும் பல நோய்களையும் குணப்படுத்தும் மருத்துவ பணிகளையும் சேர்த்து செய்கின்றது.
நாம் சாப்பிடும் சில உணவுகள் உடனே செரிக்காமல் நெஞ்செரிச்சலை ஏற்படுத்திவிடும், மேலும் சிறு குழந்தைகளுக்கு வாய்வு தொல்லை, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதற்கு சிறிதளவு சோம்பை வெந்நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து, அவற்றை மிதமான சூட்டில் ஒரு டம்ளர் அளவில் இந்த சோம்பு நீரை அருந்தினால், வயிற்றில் ஏற்படும் அனைத்து கோளாறுகளும் சரியாகும்.
பெருஞ்சீரகத்தை சிறிதளவு எடுத்துக்கொண்டு வெறும் வாயில் நன்றாக மென்று சாப்பிட்டு, ஒரு கிளாஸ் வெந்நீர் பருகி வந்தால், இந்த ஜலதோஷம் பிரச்சனை உடனே சரியாகும்.
பெருஞ்சீரகத்தை நீர்கோர்ப்பு பிரச்சனை உள்ளவர்கள், அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் உடலில் சேர்ந்திருக்கும் அதிகளவு நீரை, சிறுநீர் மூலமாக வெளியேற்றும் சக்தி கொண்டதாக பெருஞ்சீரகம் இருக்கிறது.