உடலின் சீரான இயக்கத்திற்கு உதவும் சிவப்பு அரிசி !!

செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (09:17 IST)
சிவப்பு அரிசியில் அதிகமான புரதச்சத்து நிறைந்தது. புரதச்சத்து நிறைந்த இந்த  சாப்பிடுவதன் மூலம் உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்க்கிறது.


காலை உணவாக இந்த அரிசியினால் செய்த பதார்த்தங்களை சாப்பிடுவதன் மூலம் அன்றைய பொழுது முழுவதும் நமது உடல் மிகுந்த உற்சாகமாக இருக்கும். சிகப்பு அரிசியில் புட்டு, கஞ்சி, களி போன்றவற்றை செய்து சாப்பிடலாம்.

சிகப்பு அரிசியை சாப்பிட்டு வருவதன் மூலம் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். உடல் எடையை குறைக்கும் நபர்களுக்கு, சிகப்பு அரிசி பெரும் உதவி செய்கிறது. அதில் உள்ள நார்சத்து காரணமாக, உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகள் குறையும்.

இந்த அரிசி புற்றுநோய்க்கு எதிராகவும், புற்றுநோய் கிருமிகளுக்கு எதிராகவும் போராடும். எலும்புகளை நன்கு வலுப்படுத்தும் தன்மையும், தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. தலைமுடி வளர்ச்சியில் சிகப்பு அரிசி பெரும் உதவி செய்கிறது. சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்கிறது.

நீரிழிவு நோய் தாக்கம் கொண்டவர்கள் சர்க்கரை சத்துக்கள் அதிகமுள்ள வெள்ளை அரிசி போன்றவற்றை அதிகம் சாப்பிட கூடாது. ஆனால் அந்த அரிசிக்கு மாற்றாக நீரிழிவு நோயை நன்கு கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்த சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை காலை மற்றும் மதிய வேளைகளில் சாப்பிட்டு வருவது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்