உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு பலன்தரும் செவ்வாழை....!!

தினமும் ஒரு செவ்வாழை பழத்தினை உண்டு வந்தால் உங்களுக்கு இரத்த சோகை, இரத்த குறைபாடு போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.
 

செவ்வாழையில் இரும்புச் சத்து சுண்ணாம்புச்சத்து மற்றும் உயிர்ச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்ரன. இதனை குழந்தைபேறு வேண்டும் தம்பதியினர் அனுதினமும் உண்டு வந்தால் உடலில் உயிர் அணுக்கள் போதுமான அளவில் உற்பத்தி ஆகி கருத்தரிக்கும் வாய்ப்பினை உருவாக்கும்.
 
தினமும் செவ்வாழைப் பழம் சாப்பிடுபவர்களுக்கு அஜீரண கோளாறு ஏற்படாது. மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழை பழம் சாப்பிட்டு வந்தால் அந்த குறைபாடுகளில் இருந்து விடுபடலாம்.
 
பல் வலி, பல்லசைவு போன்ற பல வகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். நெஞ்செரிச்சலால் கஷ்டப்படுபவர்கள் தினமும் செவ்வாழையை உட்கொண்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.
 
செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது சிறுநீரக கற்கள் உருவாவது, இதய நோய் மற்றும் புற்றுநோய் தாக்குதலைத் தடுக்கும்.
 
செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விட கலோரிகள் மிகவும் குறைவு. எனவே எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் ஒரு செவ்வாழையை காலையில்  உட்கொண்டு வந்தால், பசி நீண்ட நேரம் எடுக்காமல் இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்