எண்ணற்ற ஊட்டசத்துக்கள் மற்றும் மருத்துவ பயன்களை கொண்டுள்ள மிளகு !!

வெள்ளி, 6 மே 2022 (10:02 IST)
மிளகில் மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், வைட்டமின்-சி, வைட்டமின் கே, மற்றும் நார்ச்சத்து ஆகியவை ஒரு சிறு மிளகில் அடங்கி உள்ளது.


ஆஸ்துமா, சளி, இருமல் போன்ற சுவாசப் பிரச்சினைகளுக்கு மிளகு ஒரு சிறந்த மூலிகை மருந்தாகும்.

மிளகில் உள்ள பைபரின் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமில சுரப்பை அதிகரிப்பதின் மூலம் உணவை எளிதாக ஜீரணிக்க உதவுகிறது. செரிமானத்தை எளிதாக்குகிறது, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.

சளி மற்றும் இருமல் டானிக்குகளில் மிளகு சேர்க்கப்படுகிறது. இது சுவாசக் குழாயில் உள்ள சளி மற்றும் கபத்தை உடைக்க உதவும்.

பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள் இருப்பதால், சளி மற்றும் இருமலுக்கு கருப்பு மிளகு சிறந்த  இயற்கை தீர்வாகும். அதன்  காரமான சுவை கபத்தை தளர்த்தவும், குறைக்கவும் உதவுகிறது.

அஜீரணம் மற்றும் வாய்வுக்கான ஒரு பாரம்பரிய மருந்தாக மிளகு  விளங்குகிறது. மிளகின் மருத்துவ குணங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்