காலையில் எழுந்ததும் சிலருக்கு பாதம், கை, இடுப்பு, கால் மூட்டுகளில் வலி அதிகமாக இருக்கும். மூட்டுகளில் வலி தொடர்ந்து இருப்பவர்கள், உணவில் அடிக்கடி முடக்கத்தான் கீரையை சேர்த்து கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும்.
முடக்கத்தான் கீரை பச்சிலை மருந்துகளில் மிகச்சிறந்த பச்சிலையாக விளங்குகிறது. இலையும், வேரும் இரண்டுமே வைத்தியத்துக்கு உதவுகின்றன. முடக்கத்தான் கீரையை அரைத்துக் காலையில் நெல்லிக்காய் அளவு உண்ணலாம். சொரிசிரங்கு, கரப்பான் போன்ற நோய்கள் குணமாகும்.
முடக்கத்தான் கீரையின் துவையலை தொடர்ந்து உணவில் எடுத்து கொண்டால் மலச்சிக்கல், மூல நோய், பாதவாதம், கரப்பான், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகின்றன.