பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள் இருப்பதால், சளி மற்றும் இருமலுக்கு கருப்பு மிளகு சிறந்த இயற்கை தீர்வாகும். அதன் காரமான சுவை கபத்தை தளர்த்தவும், குறைக்கவும் உதவுகிறது. சூடான சூப் அல்லது ரசத்தில் சிறிது மிளகு தூள் சேர்த்து பருகவும்.
மிளகு முதல் கட்டமாக செரிமானப் பிரச்சினைகளை சரி செய்வதில் முக்கிய பங்காற்றுகின்றது. செரிமான மண்டலத்தை வலுப்படுத்துவதில் மிளகை மிஞ்ச எந்தப் பொருளையும் சொல்ல முடியாது. மேலும் சளி, இருமல் தொல்லை உள்ளவர்கள் பாலில் மிளகினைப் போட்டு குடித்தால் பிரச்சினை உடனடியாகச் சரியாகும்.
மேலும் மிளகு தொண்டை வலி, தொண்டை வீக்கம், தொண்டைப் புண் போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகவும் உள்ளது. மேலும் உடல் எடையினைக் குறைக்க நினைப்போர் மிளகில் டீப் போட்டு காலையில் வெறும் வயிற்றில் குடித்துவரலாம். மேலும் குழந்தைகளின் உணவில் மிளகாய்த் தூளுக்கு பதிலாக மிளகினை சேர்த்தால் உணவு ஆரோக்கியமானதாக இருக்கும்.