எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து, அதை சூடு படுத்தி, சிறிது தேன் கலந்து, நாள் ஒன்றுக்கு 3 வேளை வீதம் உள்ளங்கையில் விட்டு, உட்கொள்ள வேண்டும். இதனால் தொண்டை, வலி தொண்டை தொடர்பான நோய்கள் குணமாகும்.
சித்தரத்தையைச் சிறிதளவு எடுத்துப் பொடித்து, பசும் பாலில் கலந்து உட்கொண்டால், தும்மல், மூக்கில் நீர் வடிதல் குணமாகும்.
பூண்டுத் தோல், மிளகு, ஓமம், ஆகியவற்றை இடித்து, நெருப்பு அனலில் இட்டு, புகையைப் பிடித்தால் மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல் முதலிய நோய்கள் குணமாகும்.
துளசி இலைச்சாறு 150 மில்லி, கற்கண்டு, இவை இரண்டையும் கலந்து, சர்ப்பத்தாகக் காய்ச்ச வேண்டும். அதில் வேளைக்கு ஒரு டீ ஸ்பூன் அளவு, தினசரி இருவேளை உட்கொண்ட பின், பசும்பால் அருந்தலாம். இந்த சர்பத் சர்வரோக நிவாரணியாகும்.
தேனையும், எலுமிச்சை பழ சாற்றையும், சம அளவில் உட்கொண்டால், சளி இருமல் ஆகியன குணமாகும். நீர்கோவை விலகும்.