குன்றிமணி விதைகளில் அபிரின்கள் ஏ, பி,சி அபிரலின், அபிரைன், கேலிஜ் அமிலம், அமினோ அமிலங்கள், விதை எண்ணெய்யில் கரிம அமிலங்களான பால்மிடிக், ஸ்டிராக் ஒலியிக், லினோயிக் அமிலங்களும் பிரித்தெடுக்கப் பட்டுள்ளன.
தோல் நோய்கள்: இலைகள், வேர் மற்றும் விதைகள் மருத்துவப் பயன் கொண்டவை. இலைகளின் கசாயம் இருமல், சளி மற்றும் குடல்வலி போக்கும். இலையின் சாறுடன் எண்ணெய் கலந்து வலியுட னான வீக்கங்கள் மீது பூசப்படு கிறது. வெண்குஷ்டம், பித்தம், நமைச்சல், போன்ற தோல் வியாதிகளை நீக்க உதவும்.
நரம்பு கோளறுகளை குணமாக்கும்: வேர் வலுவேற்றி, சிறுநீர் போக்கு, வாந்தி தூண்டுவது, வாய்குழறச் செய்வது, பால் உணர்வு தூண்டுவது, நரம்புக் கோளறு களுக்கு மருந்தாகிறது. கருச்சிதைவு தோற்று விப்பது, விதைகளின் பசை மேல் பூச்சாக தோள் பட்டை வலி, தொடை நரம்பு வலி, மற்றும் பக்க வாதத்தில் பயன்படுகிறது.