பயன்கள்:
1. மாதவிலக்கில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கைத் தடுப்பதற்கு 3 கிராம் வெந்தயத்தைத் தேனில் கலந்து இரண்டு வேளை தரலாம். வெட்டை நோயால் தொடை மடிப்புகளில் வரும் அரையாப்புக்கட்டி, கழலைக் கட்டிகள், பொதுவான வீக்கம் ஆகியவற்றைக் குணமாக்க வெந்தயத்தைத் தண்ணீரில் அரைத்துப் பற்றுப்போடலாம்.
2. 5 கிராம் வெந்தயத்தைப் பவுடராக்கிச் சிறிது சமையல் உப்புடன் கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி, அஜீரணம், வாயுத்தொந்தரவு, இரைப்பை பலவீனம் ஆகியவை குணமாகும்.
3. 6 கிராம் வெந்தயம், சர்க்கரை ஆகிய இரண்டையும் பாலில் கொதிக்க வைத்துப் பாயசமாகக் குடித்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். 9 கிராம் வெந்தயத்தைத் தண்ணீரில் அரைத்துத் தினசரி ஒரு வேளை சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும்.
4. நரம்புத் தளர்ச்சி, நாள்பட்ட வியாதிகளுக்குப் பிறகு ஏற்படும் பலவீனம், நரம்பு வலி, தொண்டை வலி, கழலைக் கட்டிகள், வீக்கங்கள், மார்புச் சளி, நிமோனியா ஆகியவற்றுக்கும் வெந்தயத்தைப் பயன்படுத்தலாம்.