விடியற்காலை எழுந்தவுடன் காலை கடன்களை முடித்து வெறும் வயிற்றில் அல்லது காபி, டீ, சுடுதண்ணீர் குடித்துவிட்டு தரை விரிப்பிலோ அல்லது நாற்காலியிலோ அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு மனதை சுவாசத்தின் மீது எந்த மந்திரத்தையும் உச்சரிக்காமல் முழு கவனத்தையும் இயல்பாகவும் மென்மையாகவும் உள்சுவாசம் மேலே செல்வதை கவனிக்க வேண்டும்.
நம்முடைய சுவாசம் சற்று நிற்கும் இடத்தில் (சுழுமுனை அதாவது நெஞ்சு பகுதி) சுவாசத்தை நிறுத்தி உற்று கவனியுங்கள். அதன்பின் வெளிசுவாசம் இறங்கி நிற்பதையும் கவனியுங்கள். தொடர்ந்து வேறு எந்த ஒருநினைப்பும் இன்றி தினமும் இருபது நிமிடங்கள் நாற்பது நாட்கள் இந்த யோகத்தை பயிற்சி செய்தால் போதும். நீங்கள் நினைத்த, நினைக்காதவைகள் கண்டிப்பாக நிறைவேறும்.
வாதம், பித்தம், சிலேத்துமம் குறைந்தாலும், அதிகமானாலும் வருகின்ற சகல தீராத நோய்களான முக்கியமாக மூட்டு, வலி, நரம்பு வலி,காக்காய் வலிப்பு, பக்கவாதம், ரத்த அழுத்தம், இருதயநோய், குழந்தையின்மை, முடி கொட்டுதல், சர்க்கரை, செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்சள் காமாலை, ரத்த சோகை, ரத்த வாந்தி, கல்லீரல், மூலம், பித்தப்பை கல், இருமல், சளி, ஆஸ்துமா, உடல் பருமன் போன்ற நோய்கள் கண்டிப்பாக நீங்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை.
இரவில் தூக்கம் வராதபோது, மிகுந்த கோபம், காமம், குரோதம் ஏற்படும் தருவாயில், விடை காணமுடியாமல் யோசிக்கும்போதும், நீண்டநேரம் தாம்பத்தியம் நீடித்திருக்கவும், முக்கியமாக கணவன், மனைவி, குழந்தைகள் மற்றும் நம் உறவுகளுக்கிடையே பிரச்சனை எழும்போதும் உடனே சுவாசத்தைக் கவனித்தால் போதும். உடனே நல்ல தீர்வு ஏற்படுவதைக் காணலாம்.