கணையத்தை பலப்படுத்தும் உணவு முறைகள் பற்றி தெரிந்துக்கொள்வோம்...!!
பூண்டில் உள்ள அலிசின் எனும் பயோஆக்டிவ் சத்து, கணையத்தில் உருவாகும் கட்டிகளைத் தடுக்கும் வல்லமை கொண்டது. உணவில் பூண்டு சேர்ப்பதால், காயங்கள் மற்றும் கட்டிகளிலிருந்து கணையத்தை முழுமையாகப் பாதுகாத்து, பலப்படுத்தும்.
அன்றாட உணவுகளில் சிறிதளவு பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்துக்கொள்ளலாம். பூண்டு, சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் என்பதால், இன்சுலினைச் சரியாகச் சுரக்க உதவுகிறது.
மஞ்சளில் உள்ள குர்குமின் எனும் சத்து, புற்றுநோயைத் தடுக்கக்கூடியது. தினமும் உணவில் சிறிதளவு மஞ்சத்தூளைச் சேர்ப்பதால், நாம் புற்றுநோய்ப் பிடியிலிருந்து தப்பிக்கலாம். மேலும், இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
காளானிலுள்ள நார் சத்து, செலினியம், பொட்டாஷியம், வைட்டமின் டி2, குறைந்த கலோரி சத்து இவை கணைய பாதுகாப்பிற்கு ஏற்றவை.
தயிர் கணையத்தில் நோய்த்தொற்றுகளைக் குறைத்து, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். கணையத்தை வலிமைப்படுத்தும். புரோபயாடிக் எனும் நல்ல நுண்ணுயிரிகளைக் கொண்ட தயிர், செரிமானத்துக்கு உதவும். கணையத்தின் மிக முக்கிய வேலை செரிமானம். எனவே தயிர் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
பசலைக்கீரைக்கு கணையத்தினை புற்று நோயிலிருந்து கூட பாதுகாக்கும் திறன் உண்டு. வாரம் இரு முறையாவது இதனை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
புரோக்கோலியில் உள்ள நார்ச்சத்து, உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். மலச்சிக்கல் வராமல் தடுக்கும். புரோக்கோலியில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி, கணையப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.