எலுமிச்சையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம், பாந்தோத்தேனிக் அமிலம், நியாசின், தியாமின் மற்றும் பல வகையான புரதங்கள் உள்ளன.
மிகவும் புளிப்பு சுவையுடன் இருக்கும் எலுமிச்சை உடலில் செரிமான தொந்தரவினை போக்குகின்றது. எலுமிச்சை பழத்தின் சாரை குடிப்பதால் உடலில் கூடுதல் கலோரிகளை எரிப்பதோடு, எடையினைக் குறைப்பதற்கு பெரிதும் உதவி செய்கின்றது.
எலுமிச்சை சாற்றில் இஞ்சி சாற்றை சிறிது சர்க்கரையுடன் கலந்து சாப்பிடுவது வயிற்று வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. அதுமட்டுமின்றி காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளில் எலுமிச்சை பழத்தை பிழிவது காய்கறிகளின் சுவை மற்றும் ஊட்டச்சத்துக்களை அதிகரிப்பதுடன், எளிதில் ஜீரணிக்கவும் செய்கின்றது.