தயிரில் உள்ள முக்கியமான வைட்டமின்களும் சத்துகளும் !!

புதன், 8 ஜூன் 2022 (17:45 IST)
தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச்சத்துகளும் அடைங்கியுள்ளன. கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் 'பி' யும் தயிரில் இருந்தே பெறப்படுகிறது.


தயிரில் உள்ள புரொட்டீன்,பாலில் உள்ள புரொட்டீனை விட விரைவில் ஜீரணமாகிவிடும். பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும்.

பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா, மனிதனின் குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவையும் உருவாக்குகிறது.

ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்து குளித்தால் தூக்கம் நன்றாக வரும். சூரிய ஓளியால் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கு தயிர் சிறந்த மருந்தும்கூட. அல்சர் மற்றும் வயிற்றுப் போக்குக்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தில் அழிக்கப்படுக்கிறது.

மஞ்சள் காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்