சப்போட்டா சாப்பிடுவதால் இத்தனை மருத்துவ குணங்கள் உண்டா...?

சப்போட்டா பழத்தில் உள்ள வைட்டமின் ஏ சருமம் மற்றும் செல் சவ்வுகள் நன்கு வளர உதவுவதுடன், நுரையீரல் மற்றும் வாய்ப் புற்றுநோய்க்கும் எதிர்ப்பாற்றலாகச் செயல்படுகிறது.
பொட்டாசியம், தாமிரம், இரும்பு போன்ற தாதுக்களும் போலேட், நியாசின் போன்றனவும் வளர்சிதை மாற்றச் செயல்களிலும் நொதிகளின் செயல்பாட்டிற்குத் துணைபுரிவதிலும் உதவுகின்றன. மேலும், புற்றுநோயினை உண்டாக்கும் நச்சுப் பொருட்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைப்  பெற்றுள்ளது.
 
இரைப்பையில் நொதிகளின் சுரப்பினைக் கட்டுப்படுத்தி உடல் பருமனைக் குறைக்கும் ஆற்றல் கொண்ட சப்போட்டா சிறந்த சிறுநீர்  பெருக்கியாகவும் செயல்படுகிறது.
 
சப்போட்டா வைட்டமின் ஏ என்னும் சத்தை அதிக அளவு கொண்டுள்ளது. வைட்டமின் ஏ-யினால் வயதான காலத்திலும் கூட, பார்வையை  மேம்படுத்த உதவுகிறது.
 
வைட்டமின்கள் ஏ மற்றும் பி சத்தானது உடலின் சீத அமைப்பு மற்றும் தோலின் திசு அமைப்பின் சுகாதாரத்தைப் பராமரிப்பதிலும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள எதிர் ஆக்ஸிகரணிகள், நார்ச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துகள் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது.
 
கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து முதலியவைகள் எலும்பின் தாங்கும் ஆற்றலை அதிகரிக்க தேவைப்படுகின்றன. கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்றவைகள் சப்போட்டா பழத்தில் நிறைந்துக் காணப்படுவதால், எலும்புகளின் சக்தியை அதிகரித்து மற்றும்  அவற்றை வலுப்படுத்த உதவுகிறது.
 
சப்போட்டா பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. இதனால், இது ஒரு சிறந்த மேன்மையான மலமிளக்கியாகக் கருதப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்