வாரம் ஒருமுறை அகத்திக் கீரையை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் அற்புத பலன்கள்!!

அகத்திக் கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்தால் உடல் உஷ்ணம் குறையும், இளநரை ஏற்படுவதையும்  தடுக்கும். அகத்திக் கீரை மருந்து முறிவு கீரையாகும். பிற நோய்களுக்கு மருந்து சாப்பிடுபவர்கள் அகத்திக்கீரையை சாப்பிடக்கூடாது. 
அகத்திக் கீரை சாற்றில் சிறிது உப்பு சேர்த்துக் குடித்தால் வாந்தி ஏற்பட்டு பித்த நீர் வெளியாகும். இதனால் உடலில் உள்ள பித்தம் குறையும். 
 
உடம்பில் காணப்படும் தேமலுக்கு அகத்தி கீரையின் இலையை தேங்கா எண்ணெய்யில் வதக்கி, அதை விழுதாக அரைத்து பூசி வந்தால்  தேமல் முற்றிலுமாக மறையும்.
 
இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்தம் கெட்டுப்போகும் வாய்ப்புண்டு. இதனால் சொறி, சிரங்கும் தோன்றலாம். ரத்தம் குறைந்து ரத்த சோகை ஏற்பட்டு, வயிற்று வலியும் உண்டாகும். இக்கீரையை வாரத்துக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால், நோய்களில் இருந்து  தற்காத்துக் கொள்ளலாம்.
 
அகத்தி கீரை சாற்றை சேற்று புண்களில் தடவி வர சேற்று புண்கள் விரைவில் ஆறிவிடும்.
 
அகத்திக்கீரையில் சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ அதிகளவு உள்ளது. பால் சுரக்காத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கும். இக்கீரை சமைக்கும்போது நன்றாக வேக வைத்து உண்ண வேண்டும். 
 
வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் சக்தி இக்கீரைக்கு உண்டு. இதன்மூலம் மலச்சிக்கல் நீங்கும். 
 
குழந்தைகளுக்கு நீர் கோர்த்துக் கொண்டால், இக்கீரையின் சாற்றை 5க்கு ஒரு பங்கு வீதம் தேன் கலந்து தலை உச்சியில் தடவினால்  நீர்க்கோவை மறையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்