சப்ஜா விதைகளை எவ்வாறு பயன்படுத்துவதால் பலன்களை பெறலாம்...!!

வியாழன், 6 ஜனவரி 2022 (09:28 IST)
சப்சா விதைகளில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், அவை உங்களை நீண்ட நேரம் உற்சாகமாக வைத்திருக்கின்றன. மேலும் எடை குறைக்க உதவுகின்றன.

சப்ஜா விதையில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதனால் ஒரு தேக்கரண்டி ஊற வைத்த சப்ஜா விதையை பாலில் கலந்து தினமும் குடித்து வந்தால் மலச்சிக்கல் குணமாகும். மூல நோய் குணமாகும்
 
மூல நோயினால் அவதிப்படுபவர்கள் சப்ஜா விதையை ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் மூல நோய் பிரச்சனை விரைவில் குணமாகும். மேலும் உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்ற இது உதவும்.
 
உடல் சூட்டினால் மிகவும் அவதிப்படுபவர்கள் சப்ஜா விதையினை இரவு படுக்கைக்கு முன் தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் தண்ணீரில் ஊற வைத்த சப்ஜா விதையுடன் பால் அல்லது நாட்டு சக்கரை கலந்து குடித்தால் உடல் சூட்டிற்கு மிகவும் நல்லது.
 
உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுவதுடன் உஷ்ணத்தால் உண்டாகும் கண் எரிச்சலையும் இது குணப்படுத்தும்.
 
நீண்ட மற்றும் வலுவான கூந்தலுக்கு தேவையான இரும்பு, வைட்டமின் கே மற்றும் புரதம் நிறைந்திருப்பதால் ஆரோக்கியமான கூந்தலுக்கு சப்ஜா விதைகள் நன்மை பயக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்