தேனை எந்த முறையில் சாப்பிடுவதால் முழு பலன்களை பெறமுடியும்...!!

புதன், 5 ஜனவரி 2022 (17:10 IST)
அரை தேக்கரண்டி மிளகுப் பொடியை, தேனில் கலந்து சாப்பிட்டால் எப்பேர்ப்பட்ட இருமலாக இருந்தாலும் கட்டுப்படும். ஆஸ்துமா உள்ளவர்கள் இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குணமாகும். இதனுடன், இஞ்சி சாரும் சேர்த்துக் கொள்ளலாம்.

ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் ஒரு தேக்கரண்டி தேனை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட் உட்பொருட்கள் ரத்த அழுத்தத்தை குறைப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 
கல்லீரல் இரவு நேரத்தில் செயல்படுவதற்கு,போதுமான எரிபொருள் தேவை. இந்த எரிபொருள் தேனிலிருந்து அதிகம் கிடைக்கும்.
 
முகத்தில் வறட்சி, அதிக கொழுப்பு, குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை எதுவாக இருந்தாலும், தேன் சரியாகிவிடும். காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரில், தேனை கலந்து சாப்பிட்டால், தேவையில்லாத கொழுப்பு கரைந்துவிடும்.
 
குழந்தைகளுக்கு இரவில் படுக்கும் முன்பு தினமும் பாலில், தேன் கலந்து கொடுத்தால், கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு அதிகமாகி நல்ல வலிமை, உடலுக்கு கிடைக்கும்.
 
ஒரு தேக்கரண்டி தேனை சாப்பிட்ட அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும். சிலருக்கு கை, கால்கள், விரல்கள் மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும். இவர்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், நிச்சயம் குணம் தெரியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்