சப்போட்டா பழம் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் !!

புதன், 5 ஜனவரி 2022 (18:58 IST)
சப்போட்டாவில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து, முதலியவைக எலும்பிற்கு ஆற்றலை கொடுக்கிறது. இத்தகைய கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்றவைகள் சப்போட்டா பழத்தில் நிறைந்து.

சப்போட்டா பழத்தில் நார் சத்து அதிக அளவில் காணப்படுகிறது. இதனால், இது ஒரு சிறந்த மென்மையான மலமிளக்கியாக கருதப்படுகிறது. மேலும் இது குடலின் மென்பொருள் சக்தியை அதிகரித்து உடலை நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது.
 
கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் கார்போஹட்ரட் மற்றும் அத்தியாவசிய சத்துகள் அதிக அளவு கொண்ட பழம். கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இது உடல் பலவீனம், குமட்டல் மற்றும் மயக்கம் போன்றவற்றை தடுக்கிறது.
 
சப்போட்டாவில் பழத்தினை சாப்பிடுவதால் சருமம் நன்கு பொலிவாகும். அதிலும் இந்த பழத்தில் உள்ள வைட்டமின் இ சத்தின் காரணமாக ஆரோக்கியமான அழகான சருமம் பெற உதவி செய்கிறது. எனவே, சப்போட்டா பழம் சாப்பிட்டு வருவது சருமத்திற்கு சிறந்தது.
 
சப்போட்டா பழம் சாப்பிடுவதன் மூலமாக நெடுநாட்களாக தீராத இருமல் , மற்றும் நாசி வழியாக சளி ஒழுகுதல் போன்றவற்றை செய்கின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்