ஆப்பிள் சைடர் வினிகரை பயன்படுத்தும் விதமும் நன்மைகளும் !!

புதன், 20 ஏப்ரல் 2022 (10:42 IST)
காலையில் நீரில் கலந்து குடிக்க உடலின் சக்தி கூடுகின்றது. உடற்பயிற்சிக்கு பின் ஏற்படும் சோர்வு நீங்குகின்றது.


பூஞ்சை பாதிப்பு வெகுவாய் கட்டுப்படுகின்றது. அலர்ஜி மட்டுப்படுகின்றது. தசைப் பிடிப்புகள் நீங்குகின்றன. சருமம் சுத்தம் பெறுகின்றது.

ஆப்பிள் சிடர் வினிகரில், ‘பெக்டின்’ என்னும் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. வயிற்றுப்போக்கை சரிசெய்யக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. நீங்கள் பருகும் எலுமிச்சைச் சாற்றிலோ, ஆரஞ்சு சாற்றிலோ ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு சரியாகும்.

தலையில் தடவி கழுவ பொடுகு நீங்குகின்றது. வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் நீங்குகின்றது. பாத்திரங்களை கூட சுத்தம் செய்யலாம். காய்கறிகளை கழுவலாம்.

ஆப்பிள் சைடர் வினிகரில் உள்ள கிருமி நாசினி பண்புகள் தோல் மற்றும் நகங்களிலுள்ள கிருமிகளையும் பூஞ்சைகளையும் அழிக்கக்கூடியவை. ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்த வெதுவெதுப்பான நீரில் கால்களை 15 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் சுத்தமான நீரால் கால்களைக் கழுவிவர கால் மற்றும் பாதத்தில் உள்ள பூஞ்சைகள் அழிந்துவிடும்.

ஆப்பிள் சைடர் வினிகர் 1 ஸ்பூன், 1 கப் நீர் என்ற அளவிலேயே எப்பொழுதும் பயன்படுத்தவேண்டும். தினமும் உபயோகிக்க கூடாது. சருமத்தில் பயன்படுத்தினால் சிறிது தடவி எந்த அலர்ஜியும் இல்லாத பொழுதே பயன்படுத்த வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்