தேனில் உள்ள கலப்படத்தை எப்படி கண்டறிவது என பார்ப்போம். சிறிதளவு தேனை உங்கள் விரல்களில் எடுத்து தேய்த்து பாருங்கள். உண்மையான தேன் எளிதில் சருமத்தில் உறிஞ்சப்படும். ஒருவேளை உங்கள் கையில் தேன் மீதம் இருந்தால், அது உண்மையான தேன் இல்லை என்பதை அறியலாம்.
சோதனை முறை 1: கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் சுத்தமான தேன் என்று அறிந்துகொள்ளலாம்.. ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனைவிட்டால் அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேனாம்.
சோதனை முறை 2 : பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிது தொட்டு நக்கினால் தித்திப்பு நாக்கில் நீண்ட நேரம் இருக்காது. கூடவே சுவைத்தபின் மஞ்சள், சிவப்பு என்று எந்தக் கலரும் நாக்கில் ஒட்டியிருக்காது. எவ்வளவு நாள் இருந்தாலும் எறும்பு மொய்க்காதாம்.