திப்பிலியை வெற்றிலை, தூதுவளை சாறில் ஊறவைத்து பொடி ஒரு சிட்டிகை அளவு தேனில் குழைத்து சாப்பிட இருமல் குணமாகும். அதனுடன் தண்ணீர் சேர்த்து 20 மில்லியாக சுண்ட வைத்து இளஞ்சூட்டில் காலை- மாலை வாய்கொப்பளிக்க வாய் நாற்றம், பல் கூசுதல், தொண்டை புண், தொண்டை சளி குணமடையும்.
துளசியை மன அழுத்தத்தைக் குறைக்க டீயாக ஏற்கலாம். வைரஸை எதிர்த்தும் பாக்டீரியாவை செயலிழக்கவும் செய்யவல்லது. ஆன்டி ஆக்ஸிடண்டுகள் அதிகம் கொண்டது. தோல் வியாதி ரத்தத்தை சுத்திகரிக்க, தலைவலி போக்க, சீரணத்தை அதிகரித்து அஜீரணத்தை போக்க வல்லது.
கரிசலாங்கண்ணி மூலிகை கல்லீரலில் ஏற்படும் புண் வீக்கம் மற்றும் ரத்தகசிவை குணப்படுத்தும். இதிலுள்ள இரும்பு சத்து ரத்தத்தில் சிவப்பணுக்களை பெருக்கி ரத்த சோகையை நீக்குகிறது. தலைமுடி, பல், கண் தோலுக்கு ஊட்டத்தை தரவல்லது. ஜீரணத்தை அளிக்க வல்லது.