மிளகு ஓர் அற்புதமான மருத்துவ குணம் வாய்ந்த பொருள். இது நாள்பட்ட சளி மற்றும் இருமலை போக்குவதில் சிறந்தது. நாம் உண்ணும் உணவில் காரத்திற்கு வத்தல், மிளகாய் இவற்றிற்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது. மிளகு ரசம் வைத்து தினமும் மதிய வேளையில் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நன்மையை தரும்.
ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து, அதில் சிறிது உப்பைத் தூவவும். உப்பு கலந்த இஞ்சியை சில நிமிடங்களுக்கு நன்கு மெல்லவும். இஞ்சியோடு துளசி இலையையும் சேர்த்துக்கொண்டால், சளி, இருமலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.