காலையில் சிறிதளவு புதிய பச்சை தேங்காயை மென்று தின்பதால் உடலுக்கு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் கிடைத்து எலும்புகள் மற்றும் பற்களை வலுவடையச் செய்கிறது. தேங்காயை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு உடலில் கீட்டோன் சத்துக்கள் கிடைக்கப்பெற்று, கால் கை வலிப்பு நோய் குறைவதற்கு பெருமளவு உதவுகிறது.
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பது, அளவுக்கு மீறிய உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களுக்கு இளம்வயதிலேயே உடலளவில் முதுமையான தோற்றம் ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் தேங்காயை அடிக்கடி மென்று தின்ன வேண்டும்.
தேங்காயில் சைட்டோகைனின், கைநெட்டின் டிரான்ஸ் – சீட்டின் போன்ற வேதிப்பொருட்கள் அதிகமுள்ளது. இவை நமது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை சரியாக பராமரித்து, உடலுக்கு பலத்தை தருவதோடு இளமையான தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது.
பச்சை தேங்காயை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு இந்த இரண்டு சத்துக்களும் உடலுக்கு கிடைக்கப்பெற்று, தலைமுடி அடர்த்தியாக வளர உதவுகிறது. முடி உதிர்வு ஏற்படுவதை வெகுவாக குறைக்கிறது. மேலும் இளநரை ஏற்படுவதை தடுத்து பளபளப்பான அடர் கருப்பு நிறம் கொண்ட முடி வளர தேங்காய் துணை புரிகிறது.