ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புசளி, காசநோய் தொந்தரவு இருப்பவர்கள், தினம் இருபது சுண்டைவற்றலை சிறிது நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிட்டால். நோய் கட்டுப்படும். சுண்டைக்காய் சிறுநீரை பெருக்கும் தன்மைகொண்டது. கல்லீரல், மண்ணீரல் நோய்களையும் நீக்க உதவுகின்றது. அதேபோன்று சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்
சுண்டைக்காயை உனவில் சேர்த்து வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். மேலும் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும் புளித்த ஏப்பம், மூட்டுவலி போன்றவைகளுக்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து. எனவே உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவேண்டும்