அரளிப்பூ தலையில் உள்ள பேன்களை கொல்லும். அல்லி மலரின் இதழ்களையும், அதன் உள்பகுதியையும் அப்படியே பச்சையாக சாப்பிடலாம். இதனால் உஷ்ணம் குறையும். நீரிழிவு உள்ளவர்கள் அல்லிப்பூ கொதிக்க வைத்த நீரைக் குடித்தால் நோய் கட்டுப்படும்.
ரோஜா மலரின் இதழ்கள் வாய்ப்புண், குடல் புண், தொண்டை புண்ணை ஆற்றும். சீறுநீர் கடுப்பை நீக்கும். காது வலி, காதுப்புண்ணை ரோஜா தைலம் குணமாக்கும். மூலச்சூடு, மலச்சிக்கல், ரத்த சுத்திகரிப்பு போன்றவைக்கும் ரோஜா நல்ல மருந்து.