இயற்கை முறையில் முகத்தை பளபளப்பாக்க எளிய குறிப்புகள்...!

நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து உங்கள் முகத்தை கழுவிப் பாருங்கள். சும்மா பளபளவென்று மின்னும். இதேபோல் பயத்தம்பருப்பு மாவுடன், தர்பூசணி பழச்சாற்றைக் கலந்து, அக்கலவையை முகத்தில் பூசி வந்தால் முகம் பொலிவு பெறும்.
பாலில் பேரிச்சம் பழத்தை கலந்து பருகிவர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு, உடைவதும் குறையும். பாதாம் எண்ணையை நகத்தில் தடவி  வர நகங்களுக்கு கூடுதல் பளபளப்பு கிடைக்கும்.
 
கழுத்து கருத்துப்போய் முகம் மட்டும் பொலிவாக காட்சி தரும். இந்த குறையை போக்க சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறிது வெங்காயச்சாறு, ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டு, இவற்றுடன் சிறிதளவு பயத்த மாவு கலந்து கழுத்தைச் சுற்றி பூசிவிடுங்கள். பத்து நிமிடம் கழித்து  கழுத்திலிருந்து தாடை நோக்கி இலேசாக மசாஜ் செய்துவிடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்ய நாளடைவில் உங்கள் கழுத்தும் கருமை நிறம்  நீங்கி பளபளக்கும்.
 
ஒரு ஸ்பூன் ஈஸ்ட்டுடன், முட்டைகோசின் இலையில் சாறு எடுத்து கலந்துகொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சருமம் எங்கும்  பூசி வர சூரிய ஒளியால் கருமை அடைந்த தோலின் நிறம் இயற்கை நிறத்திற்கு மாறிவிடும். முன்பு இருந்ததைவிட சருமத்தில் நிறம்  சிவப்பாக காட்சியளிக்கும்.
 
பார்லியை தூளாக்கி, அத்துடன் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு, பால் ஆகியவற்றை கலக்க வேண்டும். பின் அந்த கலவையை, வெயில்  அதிகமாகப்படும் இடங்களான முகம், கழுத்து, கை, கால் ஆகிய இடங்களில் பூசவேண்டும். சிறிது நேரம் கழித்து, அவை காய்ந்ததும், குளிர்ந்த  நீரால் கழுவிவிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர சருமத்தில் ஏற்படும் கருமை மறைந்து போய்விடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்