இஞ்சி மஞ்சள் இனத்தை சார்ந்தது, நல்ல மணமுடைய, காரத்தன்மை உடையது . இஞ்சியை காயவைத்து பயன்படுத்துவது தான் சுக்கு. இஞ்சியும் சுக்கும் அன்றாடம் நாம் பயன்படுத்துவதாகும்.
சித்த மருத்துவத்தில் லேகியங்களிலும், குடிநீர்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. பசியை தூண்டும், செரிமான கோளாறை நீக்கும், பித்தம் நீக்கும், மயக்கம், தலை சுற்றல் போக்கும், உடல் வலி, சளி, இருமல் போக்கும்.
இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தேனில் போட்டு ஊறவைத்து தினமும் ஓரிரு துண்டுகள் சாப்பிட்டுவர (48 நாட்கள்) பித்தம், தலைசுற்றல், உணவு செரியாமை நீங்கும். மேலும் உடல் உறுதி பெறும். ஆயுள் அதிகரிக்கும். முகம் பொலிவு பெறும்.
சீரகம், கருவேப்பிலை, இஞ்சி இவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி சாப்பிட்ட வயிற்றுக்கோளாறு, செரியாமை நீங்கும்.